பிரம்ம ஞானம் | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

பிரம்ம ஞானம்

பிரம்ம ஞானம் என்பது இப்படைப்பு, இறைப்பேரொளி, பஞ்ச பூதங்கள், மூன்று குணங்கள், ஆன்மாக்கள், பதினான்கு லோகங்கள், ஐந்து கோஷங்கள், ஏழு சக்கரங்கள், தர்ம விதிகள், கர்ம விதிகள், தன்னிச்சையாகச் செயல்படுதல், மோட்சம் போன்ற, மொத்த படைப்பையும் பற்றிய முழுமையான ஞானமாகும். இந்த ஞானம், நாம் தெளிவான நோக்கத்துடன், நேர்மயமாக வாழ்க்கையை வாழ உதவுகிறது.

Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

ஆதி அந்தமற்ற பரபிரம்ம லோகத்தில் இருந்து முதன்முதலில் எல்லையற்ற இறைப்பேரொளிப் பெருங்கடல் (Ocean of Light) ஒன்று வெளிப்பட்டது. இந்த இறைப்பேரொளியிலிருந்து எல்லையற்ற பிரபஞ்ச உணர்வுப் பெருங்கடல் (Ocean of Consciousness) தோன்றியது. இந்தப் பேருணர்விலிருந்து அண்ட பேரண்டம் உருவாகியது. இறைப்பேரொளி கடவுளாகும்.

இறைப்பேரொளியின் தளம் பரபிரம்ம லோகம் என்று அழைக்கப்படுகிறது. பரபிரம்மத்திலிருந்து வெளிப்பட்ட பிரபஞ்ச உணர்வு, நீர் குமிழி தோன்றி மறைவதைப் போல் வெளிப்படுகிறது. இந்தப் பிரபஞ்ச உணர்வு தன்னை ஆண், பெண் ஆற்றல்களாகப் பிரித்துக் கொண்டது. ஆண் ஆற்றல் வடிவெடுக்காமல் இருந்தது. பெண் ஆற்றலானது தேவி லோகமாக வடிவெடுத்தது.

ஆண், பெண் ஆற்றல்கள் ஒன்றிணைந்து சிவலோகம், விஷ்ணுலோகம், பிரம்மலோகம் என மூன்று தெய்வீக லோகங்கள் உருவாகின. தெய்வங்களான சிவபெருமான், விஷ்ணு பகவான் மற்றும் பிரம்மதேவரிடம் அழித்தல், காத்தல், படைத்தல் பணிகள் முறையே ஒப்படைக்கப்பட்டன.

இறைப்பேரொளியே படைப்பின் ஆதாரம் ஆகும். முழு படைப்பும் பஞ்ச தத்துவங்கள் அல்லது பஞ்சபூதங்களால் ஆனது. அவை ஆகாயம் (சுத்த வெளி), வாயு (காற்று), அக்னி (நெருப்பு), ஜலம் (நீர்) மற்றும் பிருத்வி (நிலம்) ஆகும். படைப்பானது மூன்று குணங்களைக் கொண்டுள்ளது. அவை சத்வம், ரஜோ மற்றும் தமோ குணங்கள் ஆகும்.

எண்ணற்ற விண்மீன்கள், விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கோள்கள், பல்வேறு உயிரினங்கள் மற்றும் அவரது படைப்பாற்றலில் இருந்து தோன்றிய அனைத்தையும் கொண்ட பிரம்மாண்டத்தை பிரம்மதேவர் படைத்தார். பிரம்மாண்டம், ஈரேழு பதினான்கு லோகங்களைக் கொண்டுள்ளது. இதில் முதலாவது உலகம் மிகவும் ஆன்மிகமயமானது, பதினான்காவது உலகம் மிகவும் பொருள்சார்ந்தது (materialistic).

நாம் ஆன்மாக்கள். நாம் அனைவரும் பரபிரம்ம லோகத்தில், பேரொளிக்கடலின் துகள்கள் போல் இருந்தோம். இறைவன் அனுபவித்துணர்ந்ததை அதே நேரத்தில் நாமும் அனுபவித்துணர்ந்தோம். நாம் இறைவனைப் போலவே தூய்மையாகவும், அவருடைய அனைத்து குணங்களையும், திறன்களையும் பெற்றிருந்தோம். பேரன்பும், பேரானந்தமும் நமது இயல்புகளாயிருந்தன.

தன்னிச்சை என்பது ஆன்மா தன் சுய விருப்பத்திற்கேற்ப செயலாற்ற விழைவதாகும். இறைவன், தெய்வீக உலகங்களையும், பொருள்சார்ந்த உலகங்களையும் படைத்தபொழுது, ​​நாம் அந்த படைப்பை அனுபவித்துணர விரும்பினோம். அளவிற்கு அதிகமாக அனுபவித்துணர நேரும் பொழுது (கர்மவினை/ பிறப்பு இறப்பு சுழற்சியின் காரணமாக) இங்கேயே சிக்கிக்கொள்ள நேரிடும் என்று இறைவன் எச்சரித்தார், இருப்பினும், அவர் நம் தன்னிச்சையான விருப்பத்திற்கு மதிப்பளித்து தடை சொல்லவில்லை.

ஐந்து கோஷங்கள்

Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

பரபிரம்ம லோகத்திலிருந்து, தெய்வீக உலகங்களின் வழியாக நாம் பயணித்தபொழுது நமக்கு சிறப்பு உறைகள் அல்லது கோஷங்கள் வழங்கப்பட்டன.

இந்த பூமியை அடைந்த பிறகு நமக்கு இந்த ஸ்தூல உடல் கிடைத்தது.

அன்னமய கோஷம் - ஸ்தூல உடல், பிராணமய கோஷம் - பிராண உடல், மனோமய கோஷம் - மனம், விஞ்ஞானமய கோஷம் - புத்தி மற்றும் ஆனந்தமய கோஷம் - ஆன்மிக உடல் ஆகியவை நமது ஐந்து கோஷங்கள் ஆகும்.

ஆன்மாக்கள், பிரம்மாண்டத்தின் ஏழாவது லோகமான பூலோகத்தை அடைவதற்காக கீழிறங்கி வந்தபொழுது, சத்யலோகம், தபோலோகம், ஜனலோகம், மஹர லோகம், சுவலோகம், புவர்லோகம் ஆகிய உயரிய உலகங்கள் வழியாக பயணிக்க வேண்டியிருந்தது.

இந்த பயணத்தின்பொழுது, ​​ஒவ்வொரு உலகத்திலிருந்தும் நமது மனோமய கோஷத்தில் சக்கரங்கள் எனப்படும் சக்தி வாய்ந்த ஆற்றல் சாதனங்கள் பொருத்தப்பட்டன. எனவே, நமக்கு ஏழு சக்கரங்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட உலகத்தின் ஆற்றல்களையும், ஞானத்தையும் குறிக்கின்றன. சக்கரங்கள் இயங்கும்பொழுது அதனுடன் தொடர்புடைய உலகங்களின் ஞானம் மற்றும் ஆற்றல்களுக்கான நுழைவாயில்களாகச் செயல்படுகின்றன.

சஹஸ்ராரம், ஆக்ஞை, விசுத்தி, அனாஹதம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம் மற்றும் மூலாதரம் ஆகியவை அந்த ஏழு சக்கரங்கள் ஆகும். ஒவ்வொரு சக்கரமும், குறிப்பிட்ட உயரிய உலகத்திற்குள் ஆன்மா நுழைவதற்கும், வெளியேறுவதற்குமான நுழைவாயில் ஆகும்.

சப்தரிஷிகளின் பங்கு

Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

பஞ்ச கோஷங்களால் சூழப்பட்ட ஆன்மா, ஒன்றன் மேல் ஒன்றாகச் சூழப்பட்ட கோஷங்களின் வரம்புகளால், அதன் ஆதி மூலத்தை நினைவில் கொள்ளத் தவறியது. இது அறியாமை மற்றும் அகங்காரத்திற்கு வழிவகுத்தது.

ஆன்மா, படைப்பை அனுபவித்து, மாய வலையில் சிக்கி, புலன்களுக்கு அடிமையாகி, தெய்வீக விதிகளை மீறி, தனது உண்மையான இயல்பான பேரன்பு, பேரானந்தம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மறந்தது.

அனுபவத்தின் மிகுதியால், ஆன்மா கர்ம வினைகளை சேகரிக்கத் தொடங்கியது. ஆன்மா, ஆரம்பத்தில் அதனிடத்தில் இருந்த அனைத்து திறன்களையும் இழந்தது. எனவே, இறைவனிடம் இருந்தும், இறை இயல்பிலிருந்தும் துண்டிக்கப்பட்டது. இந்தக் கர்ம வினைகளை முற்றிலுமாக அழித்து மோட்சம் பெற ஆன்மா பல பிறவிகளை எடுக்கிறது, இருப்பினும், இன்னும் இங்கேயே சிக்கித் தவிக்கிறது.

அனைத்து ஆன்மாக்களையும் வழிநடத்துவதில் சப்தரிஷிகளுக்கு சிறப்புப் பங்கும், பொறுப்பும் உண்டு. ஆன்மாக்கள் ஒன்றிரண்டு முறை படைப்பை அனுபவித்த பிறகு, அவற்றின் ஆதிமூலமான பரபிரம்மலோகத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டிய நேரமிது என்பதை ஆன்மாக்களுக்கு நினைவூட்டுவது அவர்களின் முக்கிய கடமையாகும்.

ஆன்மாக்கள் மாயையில் சிக்கியதால், சப்தரிஷிகள் அவற்றின் கர்ம வினைகளை அழித்து, விடுதலை பெறச் செய்ய, சிறப்பு நுட்பங்களான தியானம் மற்றும் நேர்மயமாக்குதலை வகுத்தனர். இந்த நுட்பங்களை இறைப்பணியாற்ற மனித பிறப்பெடுத்த மகத்துவம் மிக்க ஆசான்களின் மூலம் மனிதகுலத்திற்கு வழங்கினர்.

ஆன்மா தனது பயணத்தை முடித்த பின்னர் அடைகிற இறுதி சுதந்திரம், முக்தி அல்லது மோட்சம் என்று அழைக்கப்படுகிறது.

குரு என்பவர் ஆன்மிக வழிகாட்டியாவார். அவர் நம்மை வழிநடத்தவும், கர்ம வினைகள் மற்றும் பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்கவும் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவர் நமது ஆன்மிகப் பயணத்தைத் துவங்கி வைத்து, நமது வாழ்க்கையின் நோக்கத்தை புரிய வைத்து, மிக முக்கியமாக நாம் அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன், நேர்மயமாகவும், சமநிலையுடனும் ஆன்மிக மற்றும் பொருளுலக வாழ்க்கை இரண்டையும் வாழ உதவுகிறார்.