தர்மம் | ஆன்மிகம் | ஆன்மிக சாதனை | தீட்சை | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

தர்மம்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

நம் உண்மை இயல்புகளான பேரன்பிலும், தூயதன்மையிலும் நிலைத்திருத்தலே தர்மம்.

பேரொளியின் பாதையைத் தேர்வு செய்து, அதன்படி நடப்பதே தர்மம்.

அச்சமின்றி வாழ்வதே தர்மம்.

நம் மனசாட்சிக்குட்பட்டு நடப்பதே தர்மம்.

நம் மனசாட்சிக்கு எதிராக நாம் புரியும் அனைத்து செயல்களுமே அதர்மம் ஆகும்.

நம்முள் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நிகழும் மனப்போராட்டமே தர்மயுத்தம்.

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நிகழும் நிகழ்வுகள், மாயையின் விளையாட்டு.

தர்மம் எப்பொழுதும் அதர்மத்தை வெற்றிகொள்ளும். இது பிரபஞ்ச விதியாகும்.

தர்மத்தை நாம் காத்தால், தர்மம் நம்மைக் காத்து நிற்கும்.

தர்மம் ஒருபொழுதும் தோல்வியுறுவதில்லை.

ஆன்மிகம்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

ஆன்மிகம் என்பது ஆன்மாவை அறிந்துணரும் அறிவியலாகும்.

ஆன்மிகம் தர்மத்தைப் போதிக்கிறது.

ஆன்மிகம், தர்மத்தைப் பின்பற்றுவதற்கான உன்னத ஞானத்தையும், வலிமையையும் நல்குகிறது.

ஆன்மிகம் என்பது புலன் அனுபவங்களைக் கடந்து, நமது ஆன்மாவை அறிந்துணர்வதாகும்.

ஆன்மிகம், ஆத்ம ஞானத்தையும், அதற்கு அடுத்த நிலைகளையும் அடையப் பொருத்தமான பாதையை நமக்கு வகுத்துத் தருகிறது.

தன்னுள் உறையும் தெய்வீகத்தைக் கண்டறிய எடுக்கும் நேர்மையான முயற்சியே ஆன்மிகத்தின் அடித்தளமாகக் கருதப்படுகிறது.

ஆன்மிகத்தின் ஞானம் ரிஷிகளால் அருளப்பெற்றதாகும்.

ஆன்மிகம், அனைத்து மதங்களின் சாராம்சமாகும். எனவே, ஆன்மிகம் உலகளாவியதாகும்.

ஒரு ஆன்மிக அன்பர் வாழ்வையும், பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் நேர்தன்மையுடன் அணுகுபவராகத் திகழ்கிறார்.


ஆன்மிக சாதனை


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

ஆன்மிக சாதனை என்பது தன்னொழுக்கத்துடன் ஒரு இலக்கை அடைய விரும்பி மேற்கொள்ளும் பயிற்சியாகும்.

ஆன்மிக சாதனை என்பது எந்தவொரு ஆன்மிக பயிற்சியையும் அன்றாடம் தொடர்ந்து செய்வதாகும்.

ஆத்ம ஞானம் அடைவதே ஆன்மிக சாதனையின் முதல் குறிக்கோளாகும்.

ஆன்மிக சாதனையில் நமக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள இடைவெளி மறைகிறது.

ஆன்மிக சாதனை என்பது குருவின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகும்.

ஆன்மிகசாதனை என்பது ஆன்மாவின் அழைப்பாகும். இதை எந்த வயதிலும் மேற்கொள்ளலாம்.

ஆன்மிகசாதனைக்கு நம்பிக்கை, பொறுமை மற்றும் ஏற்புடைமை மிகவும் இன்றியமையாதது ஆகும்.

ஆன்மிக சாதனை பொருள்சார்ந்த வாழ்க்கை மற்றும் ஆன்மிக வாழ்க்கை இரண்டையும் சமநிலையோடு அணுகத் தேவையான மனப் பக்குவத்தை அளிக்கிறது.


தீட்சை


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

தீட்சை என்பது குருவானவர் ஆன்மிக ஆற்றல்களை ஆன்மிக ஆர்வலருக்கு அருளுவதாகும்.

தீட்சையின் பொழுது ஆன்மா இறைப்பேரொளியுடன் மீண்டும் இணைகிறது.

குருவின் பேரருளால் தீட்சை வழங்கப்படுகிறது.

தீட்சை நமது உடல், மன இயக்கங்களைச் சீர்செய்து தூய்மைப்படுத்துவதோடு, ஆன்மிக சாதனையில் அதிக அளவிலான ஆற்றல்களை நாம் கிரகிக்க உதவுகிறது.

தீட்சை என்பது ஆன்மிக சாதனை மற்றும் குருவிடம் நம்முடைய அர்பணிப்பின் துவக்கமாகும்.

தீட்சை என்பது ஆன்மிக சாதனையில் ஒருவர் முன்னேறும்பொழுது தொடர்ந்து நடைபெறும் செயல்முறையாகும்.

ஆன்மிகத்தில் முன்னேற்றம் என்பது சாதகர்களுக்கு அளிக்கப்படும் உயர் நிலை தீட்சைகளின் மூலம் அறியப்படுகிறது. ஒவ்வொரு தீட்சையும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.