ஓம் | ஆற்றல்கள் | பிராண சக்தி | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

ஓம்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

படைப்பு வெளிப்பட்டபொழுது முதலில் தோன்றிய ஓம்கார ஒலி, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் அதிர்கிறது.

இது படைப்பின் மூன்று அதிர்வு நிலைகளைக் குறிக்கிறது - படைத்தல் (அ - அகரம்), காத்தல் (உ - உகரம்) மற்றும் அழித்தல் (ம் - மகரம்).

ஓம் என்பது வாய் பேச இயலாதவர்களும் எளிதாக உச்சரிக்கும் தனித்தன்மை கொண்ட ஒரு ஒற்றைச் சொல்லாகும்.

புனிதமான ஓம்கார மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பதால் ஒருவர் மிக உயரிய தெய்வீக நிலைகளை அறிந்துணர முடியும்.

ஆழ்ந்த அமைதியில், ஓம்கார ஒலியை நம்முள்ளே கேட்க முடியும்.

ஆற்றல்கள்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

ஆற்றல்கள் என்பது இறைப்பேரொளியின் மாறுபட்ட அதிர்வலைகளின் வெளிப்பாடாகும்.

ஆற்றல்கள், ஆதிமூலமான பேரொளியிலிருந்து வெளிப்படுவதால் பேரன்பு, பேரறிவு, மற்றும் தூய்மை நிறைந்ததாக விளங்குகிறது.

பேரொளியின் அதிர்வலைகள் ஏற்படுத்தும் எதிரொலியின் அடர்த்தியைப் பொறுத்து, ஆற்றல்கள் திடமாகவோ அல்லது நுட்பமாகவோ இருக்கலாம். ஆகையால், படைப்பில் உள்ள எந்தவொரு பொருளும், அணுக்கள் முதல் விண்மீன்கள் வரை, நுண்ணுயிரிகள் முதல் பேரண்டம் வரை நுட்பமான ஆற்றல் புலத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

வெவ்வேறு விதத்தில் மற்றும் விகிதத்தில் ஒன்றிணையும் ஆற்றல்கள், வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்டிருப்பதால் படைப்பில் பன்முகத்தன்மையைச் சேர்க்கின்றன, எனவே, ஆற்றல்கள் படைப்பில் மாயைக்குக் காரணமாகின்றன.

பருப்பொருட்களை உருவாக்கக்கூடிய ஆற்றல் களம் மண்ணுலகம் தோன்றுவதற்கும், நுட்ப ஆற்றல் களம் சூக்ஷ்ம உலகம் தோன்றுவதற்கும் காரணமாகிறது.

பஞ்ச பூதங்களான - ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றின் ஆற்றல்கள் குறிப்பிட்ட தெய்வீக விகிதத்தில் ஒன்றிணையும் பொழுது உயிர்கள் உருவாகின்றன.

ஆற்றல், உயிர்களின் மூலமும், வாழ்வாதாரமும் ஆகும்.

நமது ஸ்தூல உடல் மற்றும் நுண்ணுடலுக்குத் தேவையான ஆற்றல்களை நாம் உணவு, நீர், சூரியன்(பிராணன்) மற்றும் பிரபஞ்ச ஆற்றல்களின் மூலம் பெறுகிறோம்.

நாம் மிகவும் ஆழ்ந்து ஆன்மிகச் சாதனை செய்யும்பொழுது, நம்முள் தூய பிரபஞ்ச ஆற்றல்கள் அபரிமிதமாகப் பாய்ந்து, நமது உடலமைப்பைத் தூய்மைப்படுத்தி, நமது ஆன்மிக முன்னேற்றத்தை விரைவுபடுத்தும்.

பிராண சக்தி


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

பிராண சக்தி என்பது சூரியனிடமிருந்து நாம் பெறும் விசேஷமான,நுண்ஆற்றலாகும்.

உயிர் மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது பிராணனே ஆகும்.

நாடிகள் எனப்படும் நுண்ணிய ஆற்றல் நாளங்கள் கொண்ட வழியமைப்பின் வழியாக இந்தப் பிராண சக்தியை, பிராணமய கோஷம் பெறுகிறது.

நமது உடலில் 72,000 நாடிகள் உள்ளன. இவை பிராண சக்தியின் நுழைவாயிலாகச் செயல்படுகின்றன.

நம் ஆற்றல் திறன், உயிர் சக்தி, ஆயுள் காலம் ஆகியவை நாம் சுவாசிக்கும் முறையுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, பிராணாயாமம் ஒரு இன்றியமையாத ஆன்மிகப் பயிற்சியாகக் கருதப்படுகிறது.

நம்மால் நம் பிராணனைக் கட்டுப்படுத்த முடியுமெனில், நம் வாழ்வையும், வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் கட்டுப்படுத்த முடியும்.