அண்மைய நிகழ்வுகள் | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

அண்மைய நிகழ்வுகள்


  • செப்டம்பர் 20 - அக்டோபர் 1, 2023

    நான்கு புனித தல யாத்திரை (சார் தாம்)

    குருஜி ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா அவர்களின் தலைமையில், செப்டம்பர் மாதம், சுமார் 60 பேர் கொண்ட குழு, நான்கு புனித தல (சார் தாம்) யாத்திரையின் வாயிலாகப் பல்வேறு சக்தி வாய்ந்த தெய்வீக ஆற்றல் மையங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த யாத்திரை, கர்ம வினைகளை அழிப்பதற்கென்றே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய புண்ணிய ஸ்தலங்களுடன், உத்தரகாசி, தாரி தேவி கோயில், ருத்திர பிரயாக், வியாச குகை, மற்றும் வசிஷ்ட குகை ஆகிய இடங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டனர்.

  • ஜூலை 3, 2023

    குரு பௌர்ணமி விழா

    குரு பௌர்ணமி அல்லது வியாச பௌர்ணமி விழாவானது, மெய்ஞானம் அடைந்த ஆசான்கள் அல்லது குருக்களுக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்ட பாரம்பரிய விழாவாகும். தங்கள் ஆன்மிகக் குருக்களுக்குத் தங்களது மரியாதையையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவிக்கும் இந்நாள், ஆன்மிகத் தேடலுள்ள ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் விஷேசமான நாளாகும். ஆடி மாதத்தில் நேரடியாகப் பரபிரம்ம லோகத்திலிருந்து தூய தெய்வீக ஆற்றல்களைப் பெறுவதால், இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு, குரு பௌர்ணமி, ஜூலை 3 ஆம் தேதி, திங்கட்கிழமையன்று விவேகானந்தா தாமில் முழு உற்சாகத்துடனும், தூய மனதுடனும் கொண்டாடப்பட்டது. இந்நாள் மிகவும் புனிதமான முறையில் கொண்டாடப்பட்டது.

  • மே 20 - 22, 2023

    தபஸ் - நிலை 1 (குழு 2) | அகண்ட தியானம் (பகவான் கல்கி ஜெயந்தி)

    குருஜி ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா அவர்கள், மே 20 மற்றும் 21 ஆம் தேதியில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி முகாமில், சிறப்புத் தியான வகுப்புகளை நடத்தினார். மேலும், முந்தைய பயிற்சி முகாமில் கற்பிக்கப்பட்ட பயிற்சிகள், கிரியைகள், யோகாசனங்கள், சூரிய நமஸ்காரம், பூர்வ தியான கிரியைகள் மற்றும் பிற பயிற்சிகளையும் மதிப்பாய்வு செய்தார். மே 22 ஆம் தேதி, காலை 6:30 மணி முதல் மதியம 12:30 மணிவரை அகண்ட தியானம் நடைபெற்றது. அன்று பகவான் கல்கி ஜெயந்தி என்பதால் மிகவும் விஷேசமான நன்னாளாக அமைந்தது.

  • மே 18, 2023

    குருஜி கிருஷ்ணானந்தா ஜெயந்தி

    குருஜி கிருஷ்ணானந்தா ஜெயந்தியை முன்னிட்டு மே 18 ஆம் தேதி, விவேகானந்தா தாமில் காலை 11:30 மணி முதல் மதியம் 1:00 மணிவரை சிறப்புத் தியான நிகழ்ச்சி நடைபெற்றது. குருஜி ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா அவர்கள் ஆன்லைன் வகுப்பின் வாயிலாக ஆன்மிகச் சாதகர்களுடன் இணைந்து அனைவரையும் ஆசீர்வதித்தார்.