எங்களுடன் இணைய | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

பிராரம்ப சாதனை (IST - இந்திய நேரப்படி)


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

சப்தரிஷிகள் மற்றும் சித்தர்கள் வகுத்த பாதையில், தியானத்தின் வாயிலாகத் தங்கள் ஆன்மீகப் பயணத்தைத் துவங்க விழையும் அன்பர்களை, ஒவ்வொரு சனிக்கிழமையும், காலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை நிகழும் "பிராரம்ப சாதனை" என்ற ஆன்லைன் தியான வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.


மேலும் விவரங்களுக்கு 9071292315 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் வாயிலாகத் தொடர்புகொள்ளவும்.


சாதனை பாதம்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் ஒரு சாதனை பாதையாகும். இங்குத் தீட்சை எடுப்பவர்கள் சாதனை பாதத்தில் வழிநடத்தப்படுகிறார்கள். அவர்களுக்குச் சம்பூரணத் தியானம் படிப்படியாகக் கற்பிக்கப்படுகிறது.

சாதனை பாதம் என்பது தியானம் செய்பவர்கள் சமாதியின் உயர் நிலைகளை எளிதில் அடைய உதவும் வகையில், ஸ்ரீ தேவாத்மானந்தா ஷம்பலா அவர்களால் விசேஷமாக வடிவமைக்கப்பட்டது. இது பரபரப்பான நவீன கால வாழ்க்கை முறையிலும் பயிற்சி செய்ய ஏற்றது. நேர்மயமாக்குதல், யோகாசனங்கள், சூரிய நமஸ்காரம், கிரியாக்கள், பிராணாயாமம், மேம்பட்ட தியான நுட்பங்கள் ஆகியவை சம்பூரணத் தியானத்தின் முக்கிய அங்கங்களாகும்.

எண்ணற்ற ஆன்மிக சாதகர்கள் தங்கள் வாழ்வில் சாதனை பாதத்தைக் கடைப்பிடித்து, தங்களது அன்றாடப் பழக்க வழக்கங்களில் வெற்றிகரமாக நன்மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். பலர் தங்கள் ஆரோக்கியத்தில் - உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், அபரிமிதமான முன்னேற்றம் இருப்பதாகவும், நேர்தன்மையுடன் இருக்கவும், தெய்வீக ஆற்றல்களுடன் ஒன்றிணைந்து அனுபவித்துணரவும் முடிவதாகத் தெரிவித்துள்ளனர்.

பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் அமைப்பானது, ஒவ்வொருவரும் தெய்வாம்சம் பொருந்தியவர் என்ற நித்திய உண்மையில் வலுவாக வேரூன்றியுள்ளது. தியானம் மற்றும் நேர்மயமாக்குதலின் வாயிலாக ஒவ்வொருவருள்ளும் இருக்கும் இந்தத் தெய்வீக அம்சத்துடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதின் மூலம், நம் வாழ்வின் உண்மையான நோக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை அடைவது சாத்தியமாகும். எங்கள் குருவின் வழிகாட்டுதலுடன் இந்த நவீன உலகில் தங்கள் ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ளவும், தன்மாற்றத்தை அடையவும் ஆர்வமுள்ள அனைவருக்கும் இப்பாதையின் கதவுகள் திறந்தே உள்ளன.

★ ★ ★ ★ ★

"My life has transformed under the guidance of Guruji Devatmananda Shamballa. His profound guidance and teachings have brought me inner peace and clarity in my life. I'm forever grateful for his spiritual guidance."

Shrinidhi Bhat, Software Engineer | Bangalore

தொடர்புக்கு


முகநூல் நிகழ்வுகள்

Brahmarishis Hermitage
Experience the power of transcendental spirituality

Typically replies within an hour
You can also call us to +91 90712 92315 from
10 a.m. to 5 p.m. or send us an email to contact@brahmarishishermitage.org
×
Chat with Us