சுதந்திரம் | தன்னிச்சை | சரணாகதி | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

சுதந்திரம்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

சுதந்திரம் என்பது ஆன்மாவின் அடிப்படை வெளிப்பாடாகும்.

ஆன்மாவானது உடல், மன இயக்கத்தை ஆளும்போது சுதந்திரம் பிறக்கிறது.

நாம் மனசாட்சியைப் பின்பற்றும்போது சுதந்திரம் சாத்தியமாகிறது.

சுதந்திரம் என்பது பயம், கவலை மற்றும் கர்ம வினைகளின் தாக்கங்கள் இல்லாத நிலையாகும்.

சுதந்திரம் என்பது நம் அனைத்து தேவையற்ற பழக்கவழக்கங்களையும் பந்தங்களையும் வேரறுப்பதாகும்.

ஒருவரின் சுதந்திரத்தில், மற்றொருவர் தலையிட்டால், கர்மவினைக்கு உட்படுவர்.

ஆன்மா தனது பயணத்தை முடித்த பின்னர் அடைகிற இறுதி சுதந்திரம், முக்தி அல்லது மோட்சம் என்று அழைக்கப்படுகிறது.

தன்னிச்சை


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

தன்னிச்சை என்பது ஆன்மா தன் சுய விருப்பத்திற்கேற்ப செயலாற்ற விழைவதாகும்.

ஆன்மா படைப்பின் பல்வேறு அனுபவங்களைப் பெற தன்னிச்சையானது உதவுகிறது.

ஆன்மாவின் பயணம் தன்னிச்சையாகச் செயல்படுவதன் மூலம் தனித்துவம் பெறுகிறது.

தன்னிச்சையுடன் தேர்ந்தெடுப்பவை ஒரு பொழுதும் விமர்சிக்கப்படுவதோ, திணிக்கப்படுவதோ இல்லை.

ஆன்மா தன்னிச்சையுடன் தேர்ந்தெடுப்பவை கர்மவினைகளுக்கு உட்படுவதில்லை, மாறாக, அவற்றால் ஏற்படும் பின் விளைவுகள் கர்மவினைகளுக்கு உட்பட்டவையாகும்.

சரணாகதி


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

சரணாகதி என்பது தன் அகங்காரத்தைச் சமர்ப்பித்தல் ஆகும்.

சரணாகதி, தெய்வ சங்கல்பத்திற்குத் தன்னை அர்ப்பணித்தல் ஆகும்.

சரணாகதி, வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளையும் தவிர்க்க முற்படாமல் ஏற்றுக்கொள்வதாகும்.

சரணாகதி, அன்பு மற்றும் நம்பிக்கையிலிருந்து பிறக்கிறது.

சரணாகதி என்பது முழு ஈடுபாட்டோடு செயலாற்றுவதாகும், செயலற்று இருப்பதல்ல.

பரிபூரணச் சரணாகதியில், நாம் கர்ம வினைகளுக்கு உட்படுவதில்லை.

சரணாகதியே இறைவனை விரைந்து அடையும் எளிய வழியாகும்.