ஆத்ம ஞானம் | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ் ஆத்ம ஞானம் | cyber_key_000

ஆத்ம ஞானம்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

ஆத்ம ஞானம் என்பது நாம் அழியாத ஆன்மா என்பதனையும், பேரொளியின் ஒரு துகள் என்பதனையும் உணர்ந்து கொள்வதாகும். ஆதலால், தன்னை உணர்தலும், இறைவனை உணர்தலும் ஒன்றேயாகும்.

ஆத்மஞானமே ஆன்மிக சாதனையின் முதன்மைக் குறிக்கோளும், மனித வாழ்க்கையின் இறுதி நோக்கமும் ஆகும்.

அனைத்து யோகங்களும், ஆத்ம ஞானத்தை அடைவதின் மூலம் இறைநிலையை உணர்தலில் முடிவுறுகிறது.

ஆத்மஞானி எந்தச் சூழ்நிலையிலும் தனது மன அமைதியையும், சமநிலையையும் இழப்பதில்லை.

ஆத்மஞானி இயல்பாகவே அன்பையும், அமைதியையும் வெளிப்படுத்துகிறார். ஆத்மஞானியிடமிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வலைகள் அவரை மட்டுமல்லாது, அவரைச் சுற்றியுள்ள மக்களிடமும் பரவுகின்றன.