தியானம் | நேர்மயமாக்குதல் | தன்மாற்றம் | பிரம்மரிஷிஸ் ஹெர்மிடேஜ்

தியானம்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

தியானம், மனதினை அமைதிப்படுத்தும் விஞ்ஞானச் செயல்முறையாகும். இது உடல், மனம் மற்றும் புத்தியை அமைதிப்படுத்துவதோடு ஆன்மாவின் உள்ளொளியை விழித்தெழச் செய்கிறது.

தியானத்தில் நாம் உருவத் தோற்றங்களைக் கடந்து செல்கிறோம்.

தியானம் அனைத்து தளைகளையும், தடைகளையும் தகர்த்தெரிந்து நம்மை விடுவிக்கிறது.

தியானம், உடல் அசைவற்று அமர்தல் (body stillness) மற்றும் சக்திவாய்ந்த முறையில் மனதை ஒருமுகப்படுத்துதலில் (concentration) இருந்து தொடங்குகிறது.

பேராற்றலின் தெய்வீக அதிர்வலைகளை அறிந்துணரும் பொழுது, நம் விழிப்புணர்வு விசாலமாகப் பரந்து விரிகிறது, நாம் ஐக்கியநிலையை அடைகிறோம். பேரொளியை நேரடியாக அறிந்துணர்கிறோம்.

தியானம் கர்மவினைகளை அழிக்கிறது; வாழ்க்கை இலகுவாகவும், எளிதாகவும், உயரிய நோக்கம் உடையதாகவும்,பயனுள்ளதாகவும், அமைதியாகவும் மாறுகிறது.

தியானம் வாழ்வில் உற்சாகத்தை அளிக்கிறது. தனக்கும், சொந்தம், சமூகம் மற்றும் அகிலமனைத்திற்கும் நிறைவை அளிக்கிறது.

தியானம், நேர்மயமாதலுக்கான பாதையைத் தெளிவுபடுத்துகிறது.

தியானம் நமக்கு ஒரு புதிய வாழ்வியல் முறையை அளிக்கிறது.

நீண்ட காலத்திற்கு ஆற்றப்படும் ஆழ்ந்த தியானத்தைத் தவம் என்கிறோம்.

நேர்மயமாக்குதல்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

எண்ணங்களின் ஆற்றலை உணர்ந்து, நமது எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நேர்மயமானதாக மாற்றுவதற்கு இந்த எண்ண ஆற்றலைப் பயன்படுத்தும் பொழுது நேர்மயமாக்குதல் துவங்குகிறது.

நம்முள்ளிருந்து அல்லது வெளியுலகிலிருந்து ஏதேனும் எதிர்மறை எண்ணம் அல்லது பலவீனம் மேலெழும்பொழுது உடனடியாக நேர்மயமான எண்ணங்களை எண்ணுவதின் மூலம் நேர்மயமாக்குதல் நடைபெறுகிறது.

நேர்மயமாக்குதல் என்பது உடல், மனம், புத்தி மற்றும் ஆன்மா என அனைத்து நிலைகளிலும், எந்த எதிர்மறையான தன்மைக்கும் இடமளிக்காது விழிப்புணர்வோடு இருத்தலாகும்.

நேர்மயமாக்குதல் என்பது நம் வாழ்விலும், வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும் நேர்மயமான அணுகுமுறையைக் கடைபிடிப்பதாகும்.

விழிப்புணர்வும், தன்மாற்றமடைய வேண்டும் என்ற உண்மையான நோக்கமும் நேர்மயமாக்குதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நேர்த்தன்மை உடைய மனம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும், மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

நேர்த்தன்மை உடைய மனம் என்பது தூய்மையான மற்றும் வலிமையான மனமாகும். அத்தகைய மனதை எந்தச் சூழ்நிலையிலும் தவறாக வழிநடத்தவோ, பாதிக்கவோ முடியாது.

நேர்த்தன்மை உடையவராகாமல் நாம் உண்மையான சுதந்திரத்தையும், உண்மையான மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாது.

நேர்மயமாக்குதல் மூலமே நமது பலவீனங்கள் அனைத்தையும் வெல்வதற்கான ஆற்றல் நம்முள்ளேயே இருப்பதை உணர்ந்து கொள்வது சாத்தியமாகும்.

தன்மாற்றம்


Brahmarishis Hermitage Devatmananda Shamballa Rishis Siddhas Siddhar Sprituality Kalki Saptharishis Saptarishis
                    Divine Soul Guru Wisdom Positive Quotes

முழுமையான மற்றும் நிரந்தர மாற்றத்தையே தன்மாற்றம் என்கிறோம்.

ஒருவர் தனது கர்மவினைப் பதிவுகளின் தாக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட மேற்கொள்ளும் தீவிர முயற்சியே தன்மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

தன்மாற்றம் என்பது தேவையற்ற அனைத்தையும் துறப்பதாகும்.

தன்மாற்றமடைந்தவர் ஒருபொழுதும் முந்தைய நிலைக்குத் திரும்புவதில்லை. ஆதலால், அவரிடத்தில் ஐயமும், அச்சமும் இருப்பதில்லை.

மனதில் மாற்றம் ஏற்படும்பொழுது, தன்மாற்றம் நிகழ்கிறது.

தன்மாற்றமடைந்தவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும், நம்பிக்கை அளிப்பவராகவும், வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் திகழ்கிறார்.